முதல் வகுப்பில் சேர்க்க குழந்தையின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 28, 2020

முதல் வகுப்பில் சேர்க்க குழந்தையின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்?


👉ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க ஜீலை 31 ஆம் தேதியன்று 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

👉ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் 5 வயது பூர்த்தியடைந்தால், வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து வயது உரிய தளர்வாணை பெற்று, முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

👉முடிந்த வரை இந்த நிலையை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், தற்போது CBSE க்கு இணையான பாடத்திட்டம் மற்றும் சிந்திக்கும் வடிவிலான மதிப்பீட்டு முறைகள் அறிமுகப் படுத்தப் படுவதால், ஜுலை மாதம் 5 வயது நிரம்பிய குழந்தைக்கு இருக்கும் மன முதிர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றை ஒப்பிடும் போது, ஆகஸ்ட் மாதம் 5 வயது நிரம்பும் குழந்தைக்கு சற்று குறைவாக இருக்கும். ஆகவே குழந்தை கற்பதிலும் சிரமம் ஏற்படும். கற்பிக்கும் ஆசிரியருக்கும் சிரமம் ஏற்படும் என்பதால், ஜூலை 31 தேதிக்குள் 5 வயது நிரம்பிய குழந்தைகளை மட்டும் சேர்த்தல் நல்லது.

👉ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 க்குள் 5 வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க முடியுமா?

👉தற்போதைய விதிகளின்படி ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 31 வரை 5 வயது நிரம்பும் குழந்தைக முதல் வகுப்பில் சேர்க்க இயலாது.

No comments:

Post a Comment