அரசுப்பள்ளி மேன்மை பெற 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கை: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 12, 2021

அரசுப்பள்ளி மேன்மை பெற 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கை:

அரசுப்பள்ளி மேன்மை பெற 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து  கோரிக்கை:


அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை 
அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கைக்கு..


 
*** 
அ).அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே  ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். (தமிழக அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பாடதிட்டத்தில் அறிவியல் பாடத்தில் வெறும்  மூன்று பக்கங்களை மட்டும் பெயருக்காக இணைத்துள்ளது.கணினி அறிவியல் பாடத்தை  தனிப்பாடமாக வழங்கிட வேண்டுகிறோம் ) 


**
ஆ).சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும்  நடைமுறைபடுத்த வேண்டும்"

*சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கொண்டுவரப்பட்ட கணினி பாட புத்தகம் பல கோடி செலவில்  அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு  பயன்படாத வண்ணம் இன்று வரை முடக்கப்பட்டுள்ளதை  நடைமுறை படுத்த வேண்டும்.
**

இ).கணினியும்,ஆய்வகமும்  அனைத்து தமிழக அரசுப்பள்ளிகளிலும்:"



*அனைத்து பள்ளிகளிலும் 50கணினிகளுடன்  கணினி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்.(இலவச மடிக்கணினி கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில்  கல்வியாக வழங்கிட வேண்டுகிறோம்)
**

ஈ).அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்".


*கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய  அரசு 2011லிருந்து  இன்று வரை தரம்  உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில்  கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவேண்டும்.
**

உ). பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்".
   

 
 *கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.
***


(NCERT விதியின் படி முதல் வகுப்பிலிருந்து கணினி பாத்தை தனிப்பாடமாக மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்.)

**

 "கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான  கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள்  பயன்பெறுவார்கள்".   

****&&****

 திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர், 9626545446 
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

No comments:

Post a Comment