நிதி அமைச்சர் நிர்மலா அறிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
* அரசு வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதமாக உயர்வு
* சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ரூ.63,246 கோடி.
* மதுரையில் தொழில் வழித்தடம்.
* தமிழகத்தில் 3,500 கி.மீ. புதிய சாலை அமைக்கப்படும்.
* தமிழக சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி.
* மதுரை டூ கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை.
* உள்கட்டமைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி.
* புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்.
* கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் நிதி.
* சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவோம்.
* சுகாதார மேம்பாட்டுக்கு ரூ. 64.180 கோடி ஒதுக்கீடு.
* பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகம்
* சுயசார்பு இந்தியா : ரூ.27 லட்சம் கோடிக்கு புதிய திட்டங்கள்.
* சுகாதார துறைக்கு ரூ. 2.23. லட்சம் கோடி நிதி.
* மேலும் 2 கொரோனா மருந்து வரவுள்ளது.
* காகிதமில்லா பட்ஜெட்டால் ரூ.140 கோடி மிச்சம்.
* தேசிய மொழி பெயர்ப்பு திட்டம் உருவாகும்.
* புதிதாக 100 சைனிக் பள்ளிகள் திறக்கப்படும்.
*தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா.
* குறைந்த பட்ச ஆதார விலை நடைமுறை தொடரும்.
* சென்னை , கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.
*வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த ஆதார விலை தொடரும்.
*எல்.ஐ.சி., ஏர்இந்தியா, பங்குகள் விற்க முடிவு.
* சூரிய சக்தி கழகத்திற்கு ரூ.ஆயிரம் கோடி நிதி.
* மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.
* வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.
* தங்கம் இறக்குமதி வரி குறைப்பு.
* குறைந்தவிலை வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை.
* என்.ஆர்.ஐ.,களுக்கு இரட்டை வரி விதிப்பு ரத்து.
வருமான வரியில் மூத்த குடிமக்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டும் நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். இதுவரை 6.48 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்தனர்.
No comments:
Post a Comment