TNPSC - தேர்வு முறையில் மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 3, 2021

TNPSC - தேர்வு முறையில் மாற்றம்

 TNPSC - தேர்வு முறையில் மாற்றம்

அரசு வேலைக்கான போட்டி தேர்வில் ஆள் மாறாட்டத்தை

தடுக்கும் வகையில், ஆதார் அடிப்படையிலான, 'பயோ மெட்ரிக்' பதிவுகளை மேற்கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.


தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், புதிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை நியமிக்கும் வகையில், போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் 

இந்த தேர்வுகளில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.துறை தேர்வுகள், இன்ஜினியரிங் பணி தேர்வுகள், குரூப் - -4, குரூப் - 2, குரூப் - 1 தேர்வுகள் என, பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்த தேர்வுகளில், சில நேரங்களில் விதி மீறல் மற்றும் முறைகேடுகளும் நடந்து விடுகின்றன.


இந்நிலையில், ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில், போட்டி தேர்வு மையங்களில், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட உள்ளது.இதற்கான கருத்துருக்கு, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனால், பயோமெட்ரிக் வருகைப்பதிவு பணியை, மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வது துவங்கியுள்ளது. மார்ச்சுக்கு பின் நடக்கும் தேர்வுகளில், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வரும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

No comments:

Post a Comment