SA EXAM ( காலாண்டுத் தேர்வு ) 5 ஆம் வகுப்பு வரை எவ்வாறு நடத்த வேண்டும்? - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான வளரரி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது . கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை ( Summative Assessment ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த தெரிவிக்கப்படுகிறது.
இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
மேலும் , 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு ( CD ) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17 ஆம் தேதி அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
ஆகவே . இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment