ஆதார் கட்டாயம்! டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றம்!
இந்தியன் ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பான IRCTC, பயணிகள் முன்பதிவு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
ஏற்கனவே தட்கல் (Tatkal) டிக்கெட்டுகளுக்கு IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக இருந்த நிலையில், தற்போது 60 நாட்களுக்கு முன்பாக செய்யும் முன்பதிவுகளுக்கும் இதே விதி அமல்படுத்தப்படுகிறது.
என்ன புதிய விதிமுறை?
ஒரு குறிப்பிட்ட தேதியில் பயணம் செய்ய, 60 நாட்களுக்கு முன்பாக காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவில் டிக்கெட் பெற வேண்டுமென்றால், IRCTC கணக்குடன் ஆதார் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஜனவரி 12 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது.
அன்றைய தினத்திலிருந்து, ஆதார் இணைக்காத IRCTC கணக்குகள் மூலம் காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.IRCTC இந்த மாற்றத்தை படிப்படியாக அமல்படுத்துகிறது.
டிசம்பர் 29 முதல்
காலை 8 மணி – மதியம் 12 மணினன வரை, ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
மதியம் 12 மணிக்கு பிறகு, ஆதார் இணைக்காதவர்களும் முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 5 முதல்
காலை 8 மணி – மாலை 4 மணி வரை, ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் மட்டுமே அனுமதி.
ஜனவரி 12 முதல்
காலை 8 மணி – இரவு 12 மணி வரை, முழு நாளும் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
No comments:
Post a Comment