தேர்வு மையத்திற்கு பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் செல்ல தடை : தேர்வுத்துறை அதிரடி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 4, 2018

தேர்வு மையத்திற்கு பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் செல்ல தடை : தேர்வுத்துறை அதிரடி

தேர்வு மையத்திற்கு பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் செல்ல தடை : தேர்வுத்துறை அதிரடி
தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே செல்லக்கூடாது என தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலை 8.30 மணிக்கு மேல் பள்ளியின் உள்ளே செல்லக்கூடாது என தேர்வுத்துறை இயக்கம் கூறியுள்ளது. 
பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், பிற பணியாளர்களும் மையத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் அனுமதி ரத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்வுத்துறை இயக்கம் எச்சரி்க்கை விடுத்துள்ளது. பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment