ஐபிஎஸ் தேர்வில் 122 பேரில் 119 பேர் தோல்வி
அடிப்படை தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டது*
*ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான இந்த தேர்வில், 122 பேரில் 119 பேர் ,ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளனர்*
*136 அதிகாரிகள் அடங்கிய இந்த குழுவில் 14 பேர் வெளிநாட்டு போலீஸ் படையை சேர்ந்தவர்கள்*
*தேர்வில் தோல்வி அடைந்த அதிகாரிகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற 3 வாய்ப்புக்கள் அளிக்கப்படும்*
*ஒருவேளை 3 வாய்ப்புக்களிலும் அவர்களால் அந்த பாடங்களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், அந்த அதிகாரி தனது பணியை தொடர முடியாது*
*இது வரை ஐபிஎஸ் பட்டம் பெற்ற அதிகாரிகளில் 90 சதவீதம் பேர் சட்ட-ஒழுங்கு மற்றும் உள்துறை பாதுகாப்பு தேர்வுகளிலேயே தோல்வி அடைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது*
*தற்போது தேர்வில் தோல்வி அடைந்த அதிகாரிகளில் பலர் இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை பிரிவுக்கான பாடங்களிலேயே தோல்வி அடைந்துள்ளனர்*
*ஐபிஎஸ் பட்டம் பெறுவதற்கான இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களில் பலர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கைகளால் பதக்கமும், கோப்பைகளும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது*
x
No comments:
Post a Comment