நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 17, 2018

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மே 6ம் தேதி நடந்தது. இந்த தேர்வை தமிழகத்தில் 1,07,288 பேர் உள்பட நாடு முழுவதும் 13 லட்சத்து 26  ஆயிரத்து 725 எழுதினர். இதில் தமிழில் எழுத மட்டும் 24 ஆயிரத்து 72 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49  கேள்விகள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை குறித்து  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில்,” நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு  தலா 4 மதிப்பெண்கள் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ நிர்வாகம் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா? எனக்கேள்வி எழுப்பியதோடு, பிழையாக கேட்கப்பட்ட 49  கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறும், அதேப்போல் அடுத்த 2  வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதில்,  நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்னை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆங்கிலத்தின் வினாக்கள் முறையே  இறுதியானது என்பதால் அதனை தான் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்களும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அப்படி இருக்கையில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் மொழிமாற்றம்  தொடர்பாக எப்படி 196 கருணை மதிப்பெண்கள் வழங்க முடியும். மேலும் இதில் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில்  தற்போது புதிய தரவரிசை பட்டியல் தயார் செய்து வெளியிடும் பட்சத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மாணவர்கள் பாதிப்படைவார்கள்  என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ தொடர்ந்துள்ள இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment