அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 12, 2018

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

ஜிஎஸ்டி-யை எதிர்கொள்ளும் வகையில், 25 ஆயிரம் தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் அவ்வோப்போது பல மாற்றங்களும், புதிய முறைகளும் அதிரடியா அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆரணி அருணகிரி சத்திரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

அப்போது அந்த விழாவில் அவர் தெரிவித்ததாவது, "தமிழக அரசு பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்ய ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் என ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, கழிவறைகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஜிஎஸ்டி-யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ.) அளிக்கப்படும். 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் அடிப்படையில், செல்போனில் பாடங்களை பதிவிறக்கம் செய்து, கற்பிக்கும் புதிய முறை கொண்டுவரப்படும். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment