தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழி தொழில் நுட்ப பட்டப் படிப்பு, பால்வள தொழில் நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இணையதளம் வாயிலாக மொத்தம் 14,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 11,745 விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. இதில் 43.12 சதவீதம் பேர் முதல் பட்டதாரிகள். 54.15 சதவீதம் பேர் மாணவிகள். 70.07 சதவீதம் பேர் கிராமப்புற மாணவர்கள் ஆவர்.
தகுதி பெற்ற விண்ணப்ப தாரர்களின் தரவரிசை (ரேங்க்) பட்டியல் இன்று சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் வெளியிடப்பட்டது. துணைவேந்தர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
பதிவாளர் டாக்டர் திருநாவுக்கரசு, கட்டுப்பாட்டாளர் டாக்டர் செல்வகுமார், கல்லூரி முதல்வர் டாக்டர் குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை படிப்பு ரேங்க் பட்டியலில் ஸ்ரீகார்த்திகா (ஈரோடு) என்ற மாணவி 199.67 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். ரஜினி ரகு (சேலம்) 199.50 மார்க் 2-வது இடம், இந்துமதி (நாமக்கல்) 199.50 மார்க் 3-வது இடம் பிடித்தனர்.
கால்நடை தொழில்நுட்ப படிப்பில் பூஜிதா 199 மார்க் பெற்று (பெரம்பலுர்) முதலிடம், மணிவாசகம் 197.75 மார்க் (ராமநாதபுரம்) 2-வது இடம், இலக்கியா (வேலூர்) 197.25 மார்க் பெற்று 3-வது இடம் பிடித்தனர்.
கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு (கவுன்சில்) ஜூலை மாதம் இறுதியில் நடைபெறும். அதுபற்றிய விவரங்கள் www.tanuvas.ac.in
இணைய தளத்தில் அறிவிக்கப்படும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என துணைவேந்தர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment