தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனங்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சீருடை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் 32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment