தமிழகம் முழுவதும் பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்ததால் வட்டார கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியப் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பணப்பலன் வழங்கும் பணியை வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்கின்றனர். கருவூலம் கணினிமயமாக்கப்பட்டதால் ஊதிய பட்டியல் &'ஆன்லைன்&' மூலம் அனுப்ப வேண்டும். இதற்காக 385 வட்டார கல்வி அலுவலகங்களிலும் எல்காட் மூலம் கணினிகள், இணைய இணைப்பு வழங்கப்பட்டன.
இணைய இணைப்புக்கு பல மாதங்களாக தொடக்கக் கல்வித்துறை கட்டணம் செலுத்தவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் 12 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி உள்ளது. மாநிலம் முழுவதும் பல லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை இருப்பதால் இணையதள இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் ஊதியப் பட்டியலை கருவூலகத்திற்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது
No comments:
Post a Comment