மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து 10 மாநிலங்களில் பெட்ரோல்,
டீசல் விலை ரூ. 2.50 குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை தினசரி அதிகரித்து வந்த நிலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
விலை குறைப்பை அறிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநிலங்களும் விலையை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களான மராட்டியம் மற்றும் குஜராத் விலை குறைப்பை அறிவித்தது. இரு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 குறைக்கப்பட்டது. இவ்வரிசையில் பிற மாநிலங்களில் விலை குறைப்பை அறிவிக்க தொடங்கியது.
உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் மொத்தம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்க ரூ.5 குறையும்.
இதற்கிடையே நிதிஷ் குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மாநிலத்தில் நிதித்துறை பா.ஜனதாவிடம் உள்ளது. துணை முதல்-மந்திரியாக உள்ள சுஷில் மோடி, இதுதொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment