வடகிழக்கு பருவமழை 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 11, 2018

வடகிழக்கு பருவமழை 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் புயல் சின்னம் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. 
இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment