பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்: மாணவர் விபரங்கள் பதிவிட உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 15, 2018

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்: மாணவர் விபரங்கள் பதிவிட உத்தரவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விபரங்களை, வரும்
27ம் தேதிக்குள், எமிஸ் இணைதயளத்தில் பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எண், ஹால்டிக்கெட் வினியோகித்தல், மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, விபரங்கள் சேகரிப்பது வழக்கம். இந்த விபரங்கள் கடந்தாண்டு முதல், இணையதளம் மூலம் பெறப்படுகிறது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முகமை என்ற எமிஸ் இணையதளத்தில், பள்ளி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதை, பொதுத்தேர்வு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில், பள்ளிவாரியாக மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெயர், முதலெழுத்து, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றை சரிபார்ப்பதோடு, கடந்தாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, அளிக்கப்பட்ட பதிவெண்ணையும், வரும் 27க்குள் உள்ளீடு செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment