முறையாக வருமான வரியைச் செலுத்திவிடுபவர்களுக்கு
அரசு பொதுச் சேவைகளில் முன்னுரிமை அளிக்க இருக்கிறது.
ஒழுங்காக வருமான வரி செலுத்துவோருக்குப் பொதுச் சேவைகளில் முன்னுரிமை வழங்குவதற்கான கொள்கை வரைவை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
வருமான வரியை நேர்மையாகவும் குறித்த காலத்திலும் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகைகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு முறையாக வருமான வரியைச் செலுத்திவிடுபவர்களுக்கு அரசு பொதுச் சேவைகளில் முன்னுரிமை அளிக்க இருக்கிறது.
இதற்காக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் ஒரு குழு அமைத்து ஒழுங்காக வரி செலுத்துவோருக்கு எந்தெந்தத் துறைகளில் எப்படி சலுகைகளை அளிக்கலாம் என ஆராயப்படுகிறது.
வாட்ஸ்ஆப்பில் சமயம் தமிழ் Subscribe
இந்தக் குழுவின் வரைவுக் கொள்கை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். பிரதமர் அதனைப் பார்வையிட்ட பிறகு அமைச்சரவை கூடி அதற்கு ஒப்புதல் வழங்குவது பற்றி பரிசீலித்து முடிவு வெளியாகும்.
No comments:
Post a Comment