புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை தாமதமாக அறிவிக்கப்பட்டது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 4, 2018

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை தாமதமாக அறிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை தாமதமாக அறிவிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பொழியும் கனமழை காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடின. மேலும், புஸ்ஸி வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அப்புறப்படுததும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டனர்.
கனமழை காரணமாக காலையில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து இருந்தது. காலை 8 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டவில்லை. இதனால், கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள் பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்திலும், பேருந்துகளிலும் புறப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 8.10 மணியளவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் மாழையில் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாமல் அவதிக்குக்குள்ளாகினர். தாமதமான அறிவிப்பால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் வந்ததால் இயங்க தொடங்கின. அதிகாலையில் இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் முடங்கியுள்ளனர்.
அரபி கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வாக வாய்ப்பு உள்ளதால் 5 முதல் 8-ம் தேதி வரை புதுச்சேரியில் கனமழை முன்னறிவிப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 69 மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment