தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 13, 2018

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் !

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் ( தமிழ் வழி ) வழங்கப்படுகின்றன. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை  அனைத்து பாடங்களும் ( கணிதம் தவிர ) வீடியோவாக மாற்றப்பட்டுள்ளன. பாடல்கள் , பாடங்கள் அனைத்தும்  வரிவிடாமல்  வீடியோவாக மாற்றப்பட்டுள்ளதால் கற்பித்தல் எளிதாகிறது. மேலும் இக்குறுந்தகடுகள் சிறந்த கற்றல்-கற்பித்தல் உபகரணமாகவும்  உள்ளன. வார்த்தைகளால் விளக்க முடியாத அனைத்துப் பாடக் கருத்துகளும் வீடியோ மூலம் விளக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எளிதில் புரியவைக்க முடிகிறது. ஆங்கிலப் பாடங்களுக்கு  பாட வரிகளும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளதால் வாசிப்புத்திறன் மேம்படுகிறது. இக்குறுந்தகட்டில் Menu கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர், தான் நடத்தவேண்டிய பாடத்தை தேர்வு செய்து நடத்தலாம். ஒருமுறை பாடத்தை நடத்திய பின் பலமுறை இக்காணொலியைக் காண்பித்து மாணவர்களுக்கு நினைவூட்டலாம். மாணவர்களின் கற்றலை மேலும் வலுவூட்ட இக்குறுந்தகடுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் துணை செய்யும்.

வீடியோ உருவாக்கம் - இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.

குறுந்தகடுகள் விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண்கள் - 9791440155, 9600827648.

No comments:

Post a Comment