சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டேக் அட்டையை டிச.1 வரை இலவசமாக வழங்க வேண்டும்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 27, 2019

சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டேக் அட்டையை டிச.1 வரை இலவசமாக வழங்க வேண்டும்:

சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டேக் அட்டையை டிச.1 வரை இலவசமாக வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு நெடுஞ்சாலை துறை ஆணையம் உத்தரவுசுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மின் னணு கட்டண வசூல் முறை டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாஸ்டேக் அட்டையை டிசம்பர் 1-ம் தேதி வரை இலவசமாக வழங்குமாறு வங்கிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க 'பாஸ்டேக்' (FASTag) எனும் மின்னணு கட்டண முறை வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identifica tion) சார்ந்த 'பாஸ்டேக்' அட்டை, வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். சுங்கச் சாவடிகளில் இந்த பாஸ்டேக் அட்டை வழங்கப்படுகிறது.
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி. (வாகனப் பதிவு சான்று), புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி பாஸ்டேக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
வாகனங்களுக்கு ஏற்றவாறு கட் டணம் மாறும். குறிப்பாக காருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண் டும். இதில், ரூ.250 திரும்ப பெறும் வைப்புத் தொகை, பாஸ்டேக் அட்டை கட்டணமாக ரூ.100 வசூ லிக்கப்படுகிறது. சுங்கச் சாவடி களில் பாஸ்டேக் பயன்படுத்துவதற் கான கட்டமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ் டேக் மின்னணு கட்டண வசூல் முறை டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற் காக ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உட்பட 7 தனியார் வங்கிகள் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளுடன் ஒப் பந்தம் செய்யப்பட்டு, பாஸ்டேக் அட்டைகளை வழங்கி வருகிறோம்.
தற்போதைய நிலவரப்படி, சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே பாஸ்டேக் முறையில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக் கையை அதிகரிக்கும் வகையில் வங்கிகள், மாநில போக்குவரத்து துறைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறோம்.

வங்கிகள் ரூ.100 மதிப்பிலான பாஸ்டேக் அட்டையை நவம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை இலவசமாக வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். வாகன உரி மையாளர்கள் சுங்கச் சாவடிகளில் இதற்கான பாஸ்டேக் பிரத்யேக அட்டையை வாங்கி, தேவைக் கேற்ப ரீசார்ஜ் செய்து பயணம் செய்யலாம்.
இறுதிக்கட்ட பணிகள்
பாஸ்டேக் அட்டையை பயன் படுத்துவதால், சுங்கச் சாவடிகளில் காத்திருக்காமல், 10 விநாடிகளில் கடந்து செல்லலாம்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் இருக்கும் 482 பாதைகளில் பாஸ்டேக் கட்டண முறை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.



டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஒரே ஒரு பாதையில் மட்டுமே ரொக் கப் பணம் செலுத்தும் முறை அனுமதிக்கப்படும். மற்ற பாதை கள் அனைத்திலும் பாஸ்டேக் அட்டை பெற்ற வாகனங்கள் அனு மதிக்கப்படும். பாஸ்டேக் பாதையில் ரொக்கமாக செலுத்தினால், சுங்க கட்டணம் 2 மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும். இதில், ஒரு மடங்கு அபராத கட்டணமாக இருக்கும்.



No comments:

Post a Comment