பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படும்: முதலமைச்சர்
அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், பின்னர் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதனுடன் அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த ஆண்டும் ரூ.1000 பரிசாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment