1 முதல் 10 வகுப்பு வரை கையாளும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் கற்பிக்கும் வகுப்பிற்கான பயிற்சித் தாள்கள் தயாரிக்க வேண்டும் - CEO Proceedings - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 29, 2021

1 முதல் 10 வகுப்பு வரை கையாளும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் கற்பிக்கும் வகுப்பிற்கான பயிற்சித் தாள்கள் தயாரிக்க வேண்டும் - CEO Proceedings

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் COVID -19 மீண்டும் அதிகரித்து வருவதால்

9 முதல் 11 வகுப்பு வரை வகுப்புகள் மீண்டும் விடுப்பு வழங்கி , இணையவழி கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே 9 முதல் 10 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களிலும் உரிய கற்றல் அடைவுகளை பெற வேண்டும்.


கற்றல் அடைவுகள் என்பது ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் , அவ்வாண்டிற்கான / அப்பருவத்திற்கான / அம்மாதத்திற்கான பாடப்பொருளுக்கான கற்றல் கற்பித்தல் நிகழ்வு முடிக்கப்பட்ட பின் , ஒவ்வொரு மாணவரும் , அவ்வகுப்பிற்கான , அப்பாடத்திற்கான , பாடப்பொருளை முழுமையாக பெற்று , அதனை தன் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் திறன் பெற்றிருப்பதே ஆகும். NCERT | SCERT ஆகிய கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு வகுப்பு முடித்த பின்பும் ஒவ்வொரு பாட வாரியாக மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கற்றல் அடைவுகளை வடிவமைத்துள்ளது. 1-8 வகுப்பு வரை கையாளும் அனைத்து பட்டதாரி , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கற்றல் அடைவுகள் குறித்து விரிவான பயிற்சி அளித்துள்ளது. மேலும் அதற்கான பயிற்சி கட்டகமும் , சுவரொட்டிகளும் அனைத்து பள்ளிகளுக்கும் , ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 1-8 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் , ஒவ்வொரு பாடத் தலைப்பிலும் உள்ள கற்றல் அடைவுகள் வரையறுக்கப்பட்டு , ஒவ்வொரு பாடம் முடிக்கப்படும் பொழுதும் , அப்பாடத்தில் உள்ள கற்றல் அடைவுகளை மாணவர்கள் பெற்றுள்ளனரா என்பதை ஆசிரியர்கள் குறித்து வைக்க வேண்டும் என்ற மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அறிவுரைப்படி நடைமுறையில் உள்ளது. இதைத் தொடர்ந்து 9-10 -ம் வகுப்புகளுக்கான பாட வாரியான கற்றல் அடைவுகளை NCERT வரையறுத்து 2020 முதல் அமுல்படுத்தியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9-10 -ம் வகுப்பு கையாளும் பாட ஆசிரியர்களைக் கொண்டு பாட வாரியாக ஒவ்வொரு பாட இறுதியில் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கற்றல் அடைவுகள் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்திற்கு வடிவமைக்கப்பட்டு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு பாடத்தலைப்பிற்கும் உரிய கற்றல் அடைவுகளை அனைத்து மாணவர்களும் முழுமையாக பெறும் வண்ணம் NAS ( National Achievement Survey ) , SLAS ( State Level Achievement Survey ) Gungoio 960L018 தேர்வுகள் மற்றும் NMMS , TRUST / NTSE போன்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொள்ள செய்யும் வகையிலும் , கற்றறிந்த பாடக் கருத்துக்களை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தி விடை காணும் வகையிலும் , புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் உள்ள பயிற்சி வினாக்கள் தவிர்த்து , பிற கூடுதல் பயிற்சிகள் , உயர் சிந்தனை வினாக்கள் , செயல்பாடுகள் , செயல் திட்டங்கள் ஆகியவற்றை மாணவர்களின் திறனுக்கேற்ப , மீத்திறன் மிக்க மாணவர்கள் , சராசரி மாணவர்கள் , மெல்ல கற்கும் மாணவர்களுக்கேற்ப பயிற்சி தாள் ( Worksheet ) ஆசிரியர்களால் தயாரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குறுவள மையத்திலும் 1 முதல் 10 வகுப்பு வரை கையாளும் அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் கொண்டு வகுப்பு வாரியாக , பாட வாரியாக ஆசிரியர் குழுக்களை அமைக்க வேண்டும். குறுவளமைய அளவில் உள்ள ஏதேனும் ஒன்று ( அல்லது ) இரண்டு இடங்களில் அக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பயிற்சி தாள்களை தயாரிப்பதற்கு குறுவளமைய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் இருவரும் இணைந்து சிறப்பாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


1 முதல் 10 வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் , ஒவ்வொரு பாடத் தலைப்பிற்குமான பயிற்சித் தாள்களை ஏப்ரல் - 15 - ம் தேதிக்குள் முடித்து கோப்பில் வகுப்பு வாரியாக , பாட வாரியாக தொகுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் , பாடப்புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் உள்ள பயிற்சிகளுடன் , இப்பயிற்சித் தாள்களை Google Forms , Whattsapp குழுக்கள் , இணையவழி வகுப்புகள் அல்லது பயிற்சித் தாள்களை நகல் எடுத்து மாணவர்களுக்கு நேரடியாக வழங்கி , அவற்றை முழுமையாக முடிப்பதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். 


அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 வகுப்பு வரை கையாளும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் கற்பிக்கும் வகுப்பிற்கான பாடத்திற்கு கண்டிப்பாக பயிற்சித் தாள்கள் தயாரித்து , மாணவர்களுக்கு அனுப்பி , அப்பாடத்திற்கான கற்றல் அடைவுகளை மாணவர்கள் பெற வேண்டியதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அப்பயிற்சி தாள்கள் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று ஆசிரியர்கள் தங்கள் கோப்பில் வைத்திருக்க வேண்டும். ஆய்வு அலுவலர்கள் பள்ளிக்கு வரும் பொழுது அவற்றை சமர்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


Worksheet - CEO Proceedings - Download here

No comments:

Post a Comment