காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
வரும் 31ம் தேதியுடன் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும்
வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30ம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘வரும் 31ம் தேதி முடிவடையுள்ள மற்றும் கடந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதியுடன் முடிந்த, வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகியவற்றுக்கு ஜூன் 30ம் தேதி வரை மாநில அரசுகள் கால அவகாசம் அளிக்கலாம். கொரோனா ஊரடங்கின் போது போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்ய முடியாமல் தவித்து வந்ததையடுத்து தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய பின், நான்காவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment