சென்னை:
2021 திமுகவின் தேர்தல் அறிக்கை 60,000 கணினி ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.குமரேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசுப்பள்ளியில் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக அரசு பள்ளி மாணவர்களும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் ஆனது அரசுப் பள்ளியின் வாசலை எட்டாமல் போனது.
DMK election manifesto has disappointed 60,000 computer teachers
2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாட புத்தகம் மட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
மற்ற பாடங்களை எல்லாம் நடைமுறைப்படுத்தி விட்டு இதற்காக தனியாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கவில்லை இதனை பத்தாண்டுகளாக போராட்டமாகவும் பல இடங்களில் மனு கொடுத்தோம். அதிமுக அரசுக்கு தெரியப்படுத்தியும் கண்டுகொள்ளவில்லை.
ஏனென்றால் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் ஒரு நல்ல திட்டமானது 50 லட்சம் மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவில்லை இந்த திட்டம் மாணவர்களிடமும் கணினி ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இருந்தபோதிலும் கால் புரட்சியின் காரணமாக இந்த புத்தகங்கள் இன்று வரை அரசுப் பள்ளிக்கு சென்று சேரவில்லை புத்தக குடோன்களில் உள்ளது இன்றுவரை.
இந்த புத்தகங்களின் நிலைப்பற்றி ஆர்டிஐ வாயிலாக கேட்டபோது ஏழை மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட கணினி பாடப்புத்தகம் குப்பைகளாக மாற்றம் செய்யப்பட்டது என்ற அதிர்ச்சியான தகவலை தந்துள்ளது.
DMK election manifesto has disappointed 60,000 computer teachers
அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் இடைக்கால பட்ஜெட் தொடரில் ஆட்சி நிறைவுரும் தருவாயில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கொண்டுவருவதாக வெற்றி அறிக்கையாக கொண்டு வந்தது தேர்தல் சமயத்தில் இதற்கு முன்னோடியாக கலைஞர் அவர்களால் பாடத்தை மட்டும் அல்ல அதற்கான பாடப் புத்தகங்களையும் அச்சடிக்கப்பட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க முடியாமலே சென்றுவிட்டார் என்பதே எங்கள் அனைவரின் வேதனை.
60000 வேலையில்லா கணினி ஆசிரியர்களுக்கும் திமுக ஆட்சி காலத்தில் விடியல் ஏற்படும் என்று எண்ணியிருந்தோம் ஆனால் தேர்தல் அறிக்கையில் எங்கள் கோரிக்கை இடம்பெறாது ஏமாற்றம் அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
No comments:
Post a Comment