9 சங்கங்கள் இணைந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் புதிய கூட்டமைப்பு உருவானது- விரைவில் போராட்டம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 5, 2022

9 சங்கங்கள் இணைந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் புதிய கூட்டமைப்பு உருவானது- விரைவில் போராட்டம் அறிவிப்பு

 9 சங்கங்கள் இணைந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் புதிய கூட்டமைப்பு
உருவானது- விரைவில் போராட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அரசு அலுவலர் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் இதற்கான முதல் கூட்டம் நடந்தது. சென்னை: தமிழக அரசில் பணி புரியும் அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சங்கங்களாக செயல்பட்டு வருகின்றனர். இது தவிர ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஒன்றும் செயல்படுகிறது. இந்த சங்கங்கள் அரசு ஊழியர்களின் கோரிககைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தலைமை செயலக சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசு அனைத்து துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், அரசு பணியாளர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகியவை ஒன்று இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு அலுவலர் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் இதற்கான முதல் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 9 சங்கங்களின் மாநில தலைவர்களான இரா.சண்முகராஜன் பீட்டர் அந்தோணிசாமி, ரெங்கராஜன், கே.கணேசன், தமிழ் செல்வி, ஆர்.பிரபாகரன், சுப்பிரமணி, கணேசன், என்.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலர்கள் அமைப்புகளான 9 சங்கங்கள் இணைந்து, "தமிழ்நாடு அனைத்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு" என்ற பெயரில் இயங்குவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.  பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் ரத்து, 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வடித்தெடுத்து அரசிற்கு அனுப்புவது தொடர்பாக செப்டம்பர் 7-ந்தேதி மீண்டும் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டுவது. கூட்டமைப்பின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பாளராக அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் செயல்படுவார் எனவும், செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் மற்ற பொறுப்புகள் நியமிக்கப்படுவது எனவும் தீர்மானிக்கப் பட்டது. மேலும் கூட்டமைப்பில் இணைய விருப்பமுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை இணைத்து கொள்வது எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதுபற்றி கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறு ம் போது கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கவும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment