இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் ரெடி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 5, 2022

இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் ரெடி!

 
இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் ரெடி! எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?

இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தாவில் தான் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு வழித்தடமானது, 2006-2007 இல் தொடங்கப்பட்டது. இது 16.6 கிலோமீட்டர் நீளமும், ஹூக்ளி ஆற்றின் கீழ் 500 மீட்டர் நீளம் வரை செல்கிறது. இந்த ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும். இந்த திட்டத்தைக் கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (KMRC) உருவாக்கி வருகிறது.
இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை, மத்திய கொல்கத்தா வழியாக ஹவுரா மற்றும் சால்ட் லேக் நிலையங்களை இணைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ட்வின் டனல்கள் 1.4 மீ அகலமுள்ள கான்கிரீட் வளையங்களால் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய ஈர்ப்பே, இதில் உள்ள இந்த ட்வின் டனல்கள் தான். காரணம், இவை அரை கிலோமீட்டர் தூரத்திற்குத் தண்ணீருக்குக் கீழே செல்கிறது. இது பயணிகளுக்கு ஒரு புது வகையான அனுபவத்தை வழங்கவிருக்கிறது.

ட்வின் டனல் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நுழைவதைத் தடுக்க, அதில் ஹைட்ரோஃபிலிக் கேஸ்கட்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று KMRC தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் போன்ற அவசரநிலைகளுக்கு ஏற்றார் போலச் சுரங்கப்பாதைகளில் வெளியேறும் வழிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அவசரக்காலத்தில் பயணிகளை பத்திரமாக வெளியேற்றுவதற்காகச் சுரங்கப்பாதைகளில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு, எஸ்பிளனேட், மஹாகரன், ஹவுரா மற்றும் ஹவுரா மைதானம் ஆகிய நான்கு நிலத்தடி நிலையங்கள் இத்துடன் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை 2022 ஆம் ஆண்டில் நிறைவுபெற்று மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தோற்று காரணமாகவும், இன்னும் சில காரணங்களாலும் இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை திட்டம் திட்டமிடப்பட்ட நேரத்தில் முடிவு பெறாமல் போனது. இப்போது, உறுதியாக இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை வரும் 2023 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment