ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 29, 2023

ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர்?

 ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர்?

📝ஓர் ஆசிரியருக்கு பிரச்சினை என்று வரும்பொழுது

அவர் தொடக்கப்பள்ளியா?

ஆரம்பப் பள்ளியா?

கூட்டணியா?

SSTA?...

மன்றமா? எனப் பார்த்து பிரிந்து நிற்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.

📝ஆசிரியர் இனத்திற்கு ஒரு பிரச்சினை என்னும்பொழுது,

இடைநிலை ஆசிரியருக்கா?

பட்டதாரி ஆசிரியருக்கா?

முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கா?*எனப் பாகுபாடு பார்க்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்..



📝ஓர் ஆசிரியர் தவறு செய்தால்

அவரைக் கண்டிப்பதையோ,

தண்டிப்பதையோ தடுக்க, சங்கம் என்ற போர்வையில், முன்னே ஒரு சங்கம் வரும்பொழுது

ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்


📝தவறே செய்யாத ஆசிரியர்கள் பாதிக்கப்படும்பொழுது, நமக்கேன் வம்பு என பிற ஆசிரியர்கள் ஒதுங்கி நிற்கும்பொழுது

தோற்றுப்போகின்றனர்



📝ஏதோ ஒரு சங்கத்தில்

இணைந்துவிட்டால்

அவர்கள் தவறு செய்யும்பொழுதும் 

குரல் எழுப்பாமல்

எப்பொழுது அமைதியாய் இருக்கத் தொடங்கினார்களோ

அன்றே ஆசிரியர்கள் தோற்கத் தொடங்கிவிட்டனர்


📝ஏதோ ஒரு மூலையில்

புயலோ, பூகம்பமோ என்றால் துடிக்கும் ஆசிரியர்கள்,

ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியருக்குப் பிரச்சினை என்றால் மட்டும் அமைதியாக இருக்கும்போது தோற்கத் தொடங்குகின்றனர்



📝கல்விமுறையிலோ

கற்பித்தல் முறையிலோ ஒரு மாற்றம் வரும்பொழுது

அது சரியா? தவறா?

என விவாதிக்காமல்

அனைத்திற்கும் தலையாட்டும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்



📝சக ஆசிரியரின் திறமையைப் பாராட்ட மனமின்றி புறம்கூறத் தொடங்கும்பொழுது

ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்


📝LKG, UKG க்கு பல்லாயிரம் ஆசிரியர்களை தரம் இறக்கியபோது,

லட்சம் ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்தபொழுதே தோற்கத் தொடங்கினர்


📝ஒரே பணிநிலையில்

வேலை பார்க்கும்

சகஆசிரியர்களுக்குஊதியம்குறைத்துக் கொடுக்கும்பொழுது உரத்தக் குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபொழுதே தோற்கத் தொடங்கினர்



📝ஆசிரியர்கள் தங்களுடைய அளப்பரிய பணிக்கான பாராட்டு  மேடைகளிலும்

ஊடகங்களிலும் என நம்பி, எப்பொழுது அவற்றைத் தேடத் தொடங்கினார்களோ!

அன்றே தோற்கவும் தொடங்கிவிட்டனர்.



📝கல்விமுறையில் உள்ள

பிரச்சினைகளை உணராமல்

அங்கன்வாடிகளை

தொடக்க நிலையும்,

தொடக்க நிலையை

உயர்நிலையும்,

உயர்நிலையை மேல்நிலையும்

மாற்றி ,மாற்றி

குறைசொல்லத்தொடங்கும்போதே தோற்கவும் தொடங்கிவிட்டனர்


📝ஊதியத்தை வைத்து,

பதவியை வைத்து,

என்றைக்குஆசிரியர்கள்தங்களைத்

தரம்பிரித்துபழகத்தொடங்கினார்களோ அன்றே தோற்கத் தொடங்கிவிட்டனர்.



📝மாணவர்களிடம் குடிக்காதே எனச் சொல்லும்

ஆசிரியர்கள்,

அரசிடம்

ஏன் சாராயக் கடைகள்? எனக் கேட்க முடியவில்லை!


📝சுற்றுச்சூழல் காப்போம் எனக் கற்றுத்தரும் ஆசிரியர்கள்

அரசிடம் ஏன் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்? எனக் கேட்க முடியவில்லை.


📝தவறு எனத் தெரிந்தும்

நமக்கேன் வம்பு என

ஆசிரியர்கள் ஒதுங்கத் தொடங்கிய நாட்களிலேயே ஆசிரியர்களைத் தோல்விகளும் துரத்தத் தொடங்கி விட்டன.

உண்மை

என்னவெனில்

தோல்வி என்பதே இல்லை..

எல்லாம் தற்காலிகப் பின்னடைவு தான்..

தற்காலிகம்

நிரந்தரமானால்

அதுதான் தோல்வி..

No comments:

Post a Comment