TRB - BT,/ BRTE Exam Hall Ticket Published - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 23, 2023

TRB - BT,/ BRTE Exam Hall Ticket Published

TRB - BT,/ BRTE Exam Hall Ticket Published 
 
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .03 / 2023 , நாள் 25.10.2023 ன்படி 2023-2024ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு எதிர்வரும் 07.01.2024 அன்று நடத்தப்பட உள்ளது. 
 
    இத்தேர்வினை எழுத 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர் , விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://www.trb.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . 
 
    எனவே , தேர்வர்கள் 22 : 12.2023 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
 
    தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment