ஆசிரியர்களுக்கு பெல்லோஷிப் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 3, 2024

ஆசிரியர்களுக்கு பெல்லோஷிப்

 ஆசிரியர்களுக்கு பெல்லோஷிப்

அறிமுகம்

செனட்டர் ஜே. வில்லியம் புல்பிரைட்டின் நினைவாக வழங்கப்படும் புல்பிரைட் விருதுகள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. புல்பிரைட் எப்.டி.இ.ஏ., திட்டம், 62 நாடுகளைச் சேர்ந்த 180 பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் பாடப் பகுதிகளில் அதிக நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், அமெரிக்காவைப் பற்றிய அவர்களின் அறிவை அதிகரிக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.


பெல்லோஷிப் விபரம்


இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், ஜனவரி 2025 அல்லது செப்டம்பர் 2025ல், தொழில்முறை வளர்ச்சிக்காக ஆறு வாரகால அமெரிக்கா செல்ல முடியும். புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் உத்திகள், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல், உள்ளடக்கம் சார்ந்த அறிவுறுத்தல், பாடம் திட்டமிடல் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல் தொழில்நுட்பப் பயிற்சி பற்றிய கல்விக் கருத்தரங்குகள் ஆகியவற்றை இந்த திட்டம் கொண்டுள்ளது. கூடுதல் பயிற்சி தேவைப்படும் ஆசிரியர்களுக்கு தீவிர ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படும்.

மேலும்,

* ஜே -1 விசா

* அமெரிக்கா சென்று, வர விமான கட்டணம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து செலவீனம்

* கல்வித் திட்டக் கட்டணம்

* தங்குமிடம் மற்றும் உணவு

* விபத்து மற்றும் நோய் மருத்துவ காப்பீடு

* வாஷிங்டன், டி.சி., நகரில் பயிலரங்குஆகியவை இந்த பெல்லோஷிப் திட்டத்தில் அடங்கும்.தகுதிகள்

* 6 முதல் 12ம் வகுப்பு வரையில் முழுநேர பள்ளி ஆசிரியராக பணிபுரிதல் அவசியம். குறைந்தது 5 ஆண்டுகள் முழுநேர ஆசியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* ஆங்கிலம், சமூக ஆய்வுகள், கணிதம், அறிவியல் அல்லது சிறப்புக் கல்வி ஆகிய பாடங்களை நடத்தும் ஆசிரியராக இருக்க வேண்டும். 

* இந்தியா குடுமகனாகவும், இந்திய பள்ளியில் பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* உரிய ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்க வேண்டும்.

இத்தகைய தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படாது.


விண்ணப்பிக்கும் முறை:

 https://fulbright.irex.org/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8விபரங்களுக்கு: www.usief.org.in

No comments:

Post a Comment