மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஸ்டார் மாணவர்கள் என்ற வழி கண்ட அரசு பள்ளி (பி.எஸ்.கே மாலையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 22, 2024

மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஸ்டார் மாணவர்கள் என்ற வழி கண்ட அரசு பள்ளி (பி.எஸ்.கே மாலையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி)

இராஜபாளையம், பி.எஸ்.கே மாலையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா 2023_2024

அசத்தும் அரசுப் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று....

 மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஓர் வழி கண்ட அரசு பள்ளி

*ஸ்டார் மாணவர்கள்*

ஸ்டார் மாணவர்கள் முதல் பருவத்தில் இருந்து தொடங்கினோம்.

*முழு வருகை

சிறந்த கையெழுத்து

எண்ணும் எழுத்தும்

 செயல்பாடுகள்*

என்று வாரந்தோறும் வெள்ளி கிழமை ஸ்டார் கார்டு வழங்கி வந்தோம்.

ஒவ்வொரு பருவ நிறைவிலும் 5 கார்டுக்களுக்கு 1போனஸ் கார்டு வழங்கி வகுப்பு வாரியாக அதிக ஸ்டார் கார்டு பெற்றவர்களை முதல் மூன்று இடங்களை தேர்வு செய்து பரிசு வழங்கி ஊக்குவித்து வந்தோம்.அதோடு ஒட்டுமொத்த மூன்று இடங்களில் தேர்வானவர்களையும் பரிசளிப்பு செய்து பாராட்டி வந்தோம்.
இரண்டு பருவங்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது பருவத்தில் ஆண்டு விழாவில் மொத்தமாக மூன்று இடங்களில் தேர்வானவர்களுக்கு ஸ்டார் மாணவர்கள் சான்றிதழ் மற்றும் ஷீல்டு , பதக்கம் வழங்கி பாராட்டி பரிசளித்தோம்.
ஒட்டுமொத்தமாக 25 கார்டு களுக்கு மேல் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினோம்
மாணவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
என் பள்ளி என் கல்வி

ஆண்டு விழா 2023_2024

பள்ளியின் தூய்மையை நாள்தோறும் உறுதி செய்யும் அன்பு அம்மாவிற்கு அவர்கள் விரும்பி கேட்ட சேலை பரிசு.

No comments:

Post a Comment