வாட்ஸ்அப்: ஓரே போனில் 2 அக்கவுன்ட் பயன்படுத்துவது எப்படி..? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 24, 2024

வாட்ஸ்அப்: ஓரே போனில் 2 அக்கவுன்ட் பயன்படுத்துவது எப்படி..?

வாட்ஸ்அப்: ஓரே போனில் 2 அக்கவுன்ட் பயன்படுத்துவது எப்படி..? சென்னை: இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் பிளாட்பார்ம்களில் வாட்ஸ்அப்பும் ஒன்று. சமீப காலமாக வாட்ஸ்அப் தொடர்ந்து அதன் பயனர்களுக்கு புதுப்புது அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி ஒரே வாட்ஸ்அப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை எப்படி வைத்திருப்பது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். வாட்ஸ்அப் அனைவருக்கும் உதவும் வகையில் நிறைய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டிற்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடங்குவது, ஒன்றுக்கும் மேற்பட்ட டிவைஸ்களில் வாட்ஸ்அப்பை பார்ப்பது, பின் செய்யப்பட்ட மெசேஜ்கள், கணக்கெடுப்புகள் என எக்கச்சக்க புதிய அம்சங்களை தற்போது வழங்கியுள்ளது. ஸ்கிரீன் ஷேரிங் அம்சமும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் நீங்கள் மொபைலில் செய்யும் விஷயங்களை இன்னொருவர் பார்க்க முடியும். முன்பெல்லாம் இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்டுகளை பயன்படுத்துவதற்கு இரண்டு தனி தனி மொபைல்கள் தேவை. அதாவது இரண்டு சிம் இருந்தால் தான் டூயல் வாட்ஸ்அப் நீங்கள் பயன்படுத்த முடியும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஒரே டிவைஸில் இரண்டு தனி தனி வாட்ஸ்அப் பயன்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்போது வாட்ஸ்அப் ஒரே டிவைஸில், ஒரே வாட்ஸ்அப்பில் இன்னொரு அக்கவுண்ட்டை உருவாக்கும் வசதியை வழங்குகிறது. இந்த புதிய அம்சத்தை 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்துள்ளது. ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருப்பது எதற்காக?: இப்பொழுது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு, ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைக்க அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை லாகின் செய்து கொள்ளும் வசதியை இது வழங்குகிறது. வேலைக்குச் செல்லும் சிலர் இரண்டு ஃபோன்களை வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஒன்று அலுவலகத்தில் பயன்படுத்துவதற்கும், மற்றொன்று தங்களின் சொந்த பயன்பாட்டிற்காகவும் இருக்கும். ஆனால் அந்தத் தேவை தற்போது இருக்காது. நீங்கள் வாட்சப்பை ஒரே நேரத்தில் இரண்டு ஃபோன்களை எடுத்துச் செல்வது அல்லது லாக்அவுட் செய்து திரும்ப பயன்படுத்துவது போன்ற தொந்தரவுகளிலிருந்து விடுபட உங்களுக்கு உதவுகிறது. ஒரே மொபைலில் இரண்டு அக்கவுண்ட்டை எவ்வாறு திறப்பது?: அதற்கு முதலில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதற்கு பிறகு வலது மூலையில் உள்ள மூன்று புள்ளியை கொண்ட மெனுவை கிளிக் செய்யவும். அதில் உங்கள் சுயவிவரத்திற்கு பக்கத்தில் இருக்கும் டிராப் டவுன் மெனுவை கிளிக் செய்யுங்கள். அங்கு "Add Account" என்று காண்பிக்கப்படும். அதன் மூலம் நீங்கள் ஒரே மொபைலில் இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும். அனால் அதற்கு உங்களுக்கு இன்னொரு நம்பர் தேவை.

No comments:

Post a Comment