ஆசிரியர் பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு
1) முற்றிலும் கண்பார்வையற்றவர்கள்
2) 40% அதற்கு மேலும் உள்ள மாற்றுதிறனாளிகள்
3) மனவளரச்சி குன்றிய /மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்-SSTA
4) சிறுநீரக / இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் / கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள்
5) பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கணவன் / மனைவி முன்னுரிமை
6) விதவைகள் / 40 வயதை கடந்த முதிர்கண்ணிகள்
7) ஒரே பள்ளியில் 5 ஆண்டும் அதற்கு மேலும் பணியாற்றுவர்கள்
8 ) கணவர், மனைவி பணிபுரிபவர் முன்னுரிமை
9)முன்னுரிமையின்றி
ஆசிரியர்கள் பொது கலந்தாய்வுக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிலை எண் -176 நாள்:17.12.2021 ல் முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒன்றியங்களில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ஐந்தாவது இடத்தில் முன்னுரிமை அளிக்க குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்று முன்னுரிமை ஒன்றியத்தில் யாரேனும் பணி புரிந்திருந்தால் கவனமாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவும்.
மேலும் கடந்த ஆண்டு ஒரே பள்ளியில் ஐந்தாண்டு பணியாற்றியவர்களுக்கு பின்னர் SPOUSE வருமாறு மேற்கண்ட (176) அரசாணைக்கு பின்னர் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment