8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். இதன் அமலாக்கம் தொடர்பான பல கேள்விகள் ஊழியர்களுக்கு உள்ளன. அவற்றில் முக்கியமானது டிஏ இணைப்பு. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்று ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
டிஏ இணைப்பை ஒப்புக்கொள்ளும் வகையில் மத்திய அரசு இதுவரை எதையும் கூறவில்லை. புதிய ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி அல்லது அகவிலை நிவாரணத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்த கேள்விக்கு நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எதிர்மறையாகவே பதிலளித்துள்ளது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பணவீக்கத்தால் கணிசமாகப் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உண்மையான சில்லறைப் பணவீக்கத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும் கூறுகின்றனர். டிசம்பர் 2025-ல், தற்போதுள்ள அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று அரசாங்கம் கூறியது.
அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா?
மத்திய அரசு 2026 ஆம் ஆண்டிற்கான முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண திருத்தத்தை மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முக்கியப் படி ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. ஜனவரி-ஜூன் காலத்திற்கான திருத்தம் மார்ச் மாதத்திலும், ஜூலை-டிசம்பர் காலத்திற்கான திருத்தம் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றது.
8வது ஊதியக் குழு தனது பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் தனது முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யுமா என்பதை அரசு ஊழியர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு முன் அகவிலைப்படி இணைப்பு 6வது ஊதியக் குழுவிற்கு முன்னதாக 2004 ஆம் ஆண்டில் நடைபெற்றது. எந்த ஒரு கட்டத்திலும் 6வது ஊதியக் குழு அகவிலைப்படியையும் அடிப்படை ஊதியத்தையும் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.
5th Pay Commission: 5வது ஊதியக் குழு இணைப்புக்கு பரிந்துரைத்தது
அடிப்படை குறியீட்டை விட நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒவ்வொரு முறையும் 50 சதவீதம் அதிகரிக்கும்போது, அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக மாற்றுவதற்கு 5வது ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில், அரசாங்கம் 50 சதவீத அகவிலைப்படியை ஏப்ரல் 1, 2004 முதல் அடிப்படை ஊதியத்துடன் இணைத்தது.
DA Merger: 6வது ஊதியக் குழு அகவிலைப்படி இணைப்புக்கு பரிந்துரைக்கவில்லை
6வது மத்திய ஊதியக் குழு தனது அறிக்கையில் மேற்கூறியவற்றைக் குறிப்பிட்டிருந்தாலும், இந்த இணைப்பின் விளைவாக, விலை குறியீட்டின் தற்போதைய 306.33 என்ற அடிப்படைத் தளத்தில் ஒரு திருத்தம் கட்டாயமாக ஏற்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. "குறியீடு 50 சதவீதம் அதிகரித்தபோது, புதிய அடிப்படைத் தளம் 12 மாத சராசரி குறியீடாக இருந்திருக்க வேண்டும். விலை மட்டங்களில் உள்ள ஏற்றத்தைக் கருத்தில் கொண்டு, அடிப்படைத் தளக் குறியீடு 306.33-ஐ விட அதிகமாக இருந்திருக்கும், இது தற்போதைய விகிதங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அகவிலைப்படி விகிதத்திற்குக் வழிவகுக்கும்." என்று குழு கூறியது.
6th Pay Commission: 6வது ஊதியக் குழு ஏன் இணைப்புக்கு பரிந்துரைக்கவில்லை?
6வது மத்திய ஊதியக் குழு எந்த நிலையிலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் பரிந்துரைக்கவில்லை. “அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக மாற்றுவது, அடிப்படை குறியீட்டை ஒரே நேரத்தில் திருத்துவதுடன் இணைந்திருக்க வேண்டும். இருப்பினும், பரிந்துரைக்கப்படும் திருத்தப்பட்ட கட்டமைப்பில் இந்த மாற்றம் அவசியமில்லை, ஏனெனில் அதில் பே பேண்ட் மற்றும் தர ஊதியத்தில் உள்ள ஊதியத்தின் சதவீதமாக ஊதிய உயர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து படிகள் அல்லது சலுகைகளும் விலை குறியீட்டின் அதிகரிப்புடன் இணைக்கப்பட்டு அவ்வப்போது திருத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆணையம் எந்த நிலையிலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் பரிந்துரைக்கவில்லை." என 6வது ஊதியக்குழு தெரிவித்தது.
ஆண்டிற்கு மூன்று முறை அகவிலைப்படி வழங்குவது குறித்து 6வது ஊதியக் குழு
ஆண்டிற்கு மூன்று முறை அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, 6வது மத்திய ஊதியக் குழு, "3 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியைத் திருத்துவதற்கு நியாயமான தேவை எதுவும் இல்லை. அதன்படி, நிர்வாக வசதிக்காக, பணவீக்க ஈடுபாடு அனைத்து மட்டங்களிலும் 100 சதவீதமாகப் பராமரிக்கப்பட்டு, அகவிலைப்படி ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில், முறையே மார்ச் மற்றும் செப்டம்பர் மாதச் சம்பளத்துடன் ஆண்டிற்கு இரண்டு முறை தொடர்ந்து வழங்கப்படலாம்." என்றது
DA Merger
அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 8வது ஊதியக்குழு முழுமையாக அமலுக்கு வரும்போது உள்ள மொத்த அகவிலைப்படியையும் இணைக்காவிட்டாலும், 50% -ஐ மட்டுமாவது மத்திய அரசு அடிப்படை ஊதியத்துடன் இணைக்கு என நிபுணர்கள் நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment