மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘மாதிரி தேர்தல்’ நடத்தி அசத்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 26, 2026

மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘மாதிரி தேர்தல்’ நடத்தி அசத்தல்

மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘மாதிரி
தேர்தல்’ நடத்தி அசத்தல்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதையொட்டி மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக மாதிரி வாக்குச்சாவடி அமைத்து, வாக்காளர் அடையாள அட்டை வழங்கி தத்ரூபமாக மாதிரி சட்டப்பேரவை தேர்தல்போல் நடத்தி இருக்கிறார்கள்.

மதிப்பெண் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக் கப்படும் இக்காலக்கட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சித்ரா, நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் ஆளுமைத் திறனையும், தனித்திறன்களையும் வெளிப்படுத்த மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு புதுமைகளை புகுத்தி தனியார் பள்ளிகளை திரும்பி பார்க்க வைத்து வருகிறார்.பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் கூறுகையில், ‘‘தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்க சொன்னார்கள் ஆனால், நாங்கள் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், மாணவர் களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர் தலைவர் தேர்தலை, மாதிரி தேர்தலாக நடத்த முடிவு செய்தோம்.

        1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை வாக்காளர்களாக்கி அவர்கள் புகைப்படத்தையே அடையாள அட்டையாக உருவாக்கி வழங்கினோம். அந்த புகைப்படம், அவரவர் எதிர்காலத்தில் என்னவாக விருப்பமோ அதேபோன்று புகைப்படமாக்கி கொடுத்தோம். மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், போலீஸ், ராணுவ வீரர் போன்று அவர்களது புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கி கொடுத்தோம்.

        தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, யார், யார் போட்டியிடுகிறார்களோ, அவர்களுக்கான சின்னங்களை ஒதுக்கி பிரச்சாரம் செய்ய வைத்தோம். உண்மையான தேர்தலை போல், வேட்புமனு தாக்கல் செய்தனர். பள்ளியின் ஒரு அறையில் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் அலுவலர்களை நியமித்தோம்.

        வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க வைத்தோம். பின்னர் விரலில் மை தடவி வாக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்தோம். மாதிரி வாக்குச்சாவடி முன், காவலர்கள் போல் சீருடை அணிந்த மாணவர்களை வாக்காளர்களை ஒழுங்குப்படுத்த கூறினோம்.

தேர்தல் முடிந்தபிறகு தேர்தல் அதிகாரி முன்னிலையிலே வாக்குகள் எண்ணப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கி இனி மாணவர்களையும் வழி நடத்தும்படி திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment