மதிப்பீட்டு புலம் - Future Ready- ஜனவரி -2026 : வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 06.01.26 - 09.01.26. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 6, 2026

மதிப்பீட்டு புலம் - Future Ready- ஜனவரி -2026 : வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 06.01.26 - 09.01.26.

 மதிப்பீட்டு புலம் - Future Ready- ஜனவரி -2026 : வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 06.01.26 - 09.01.26.

மதிப்பீட்டு புலம் - Future Ready- ஜனவரி -2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 06.01.26 - 09.01.26.

இணையதள முகவரி: 

https://exam.tnschools.gov.in.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும்  பொருட்டு Future Ready திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧  மாணவர்கள் NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக Future  Ready வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து   பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள

No comments:

Post a Comment