அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, April 6, 2018

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு 
அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன் மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் (அரசாணை எண் 64, நாள்: 3.4.2018) கூறப்பட்டி ருப்பதாவது:
அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை (இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்) நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநருக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 15.3.2016-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பு தல் அளிக்க வேண்டும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, மதிப்பீடு செய்து மிகுதியான பணியிடங்கள் திரும்பப் பெற வேண்டும். அந்த பணியிடங்களில் தற்போது பணி புரிவோர் ஓய்வுபெற்ற பின்னர் அந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
நூலகர், நூலக உதவியாளர், தோட்டக்காரர், தண்ணீர் கொண்டு வருபவர் உள்ளிட்ட பணியிடங்கள் அரசு பள்ளி களுக்கே ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள மேற்கண்ட பணியிடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வதுடன் தற்போது அந்த பணியிடங்களில் பணி புரிந்து வருவோர் ஓய்வுபெற்ற பின்னர் அல்லது பதவி உயர்வு பெற்ற பின்னர், அப் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணை யில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment