பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 4, 2018

பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன்

பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு
நடத்தப்படும் - செங்கோட்டையன்பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.கோவை:கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டெம் அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை இன்று நடத்தியது.இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.புதிய பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் 3 ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்த நிலையில் 2 ஆண்டுகளில் கொண்டு வரப்படும். மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு சீருடை மாற்றப்படும் என்றார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதி நேரஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு இந்தாண்டு நடத்தப்படும். முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றார். 


No comments:

Post a Comment