அரசுப்பள்ளியில் நடந்த சூரியன் FM ரேடியோவின் "அச்சம் தவிர்" விழிப்புணர்வு நிகழ்ச்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, April 6, 2018

அரசுப்பள்ளியில் நடந்த சூரியன் FM ரேடியோவின் "அச்சம் தவிர்" விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பீமநகரில் சூரியன் FM ரேடியோவின் "அச்சம் தவிர்" விழிப்புணர்வு நிகழ்ச்சி 4.4.18 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது.

பள்ளிவயது குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள் ; அத்தகைய சூழல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்;நல்ல மற்றும் தீய தொடுதலை எப்படி இனம் காண்பது;
NO,GO,TELL போன்றவற்றை எத்தகைய நேரத்தில் பயன்படுத்த வேண்டும்;குழந்தைகள் பெற்றோரிடம் எவ்வாறு மனம்விட்டுப்
பேசவேண்டும்;தன்னையும் தன்னைப்போன்ற குழந்தைகளையும் காப்பதற்கான அமைப்பான child line 1098 போன்ற பல  கருத்துக்களை குழந்தைகள் மனதில் ஆழமாக பதியும்படி  எடுத்துக்கூறிய கிறிஸ்துராஜ் கல்லூரியின் சமூகநலத்துறைப்பிரிவின் தலைமை விரிவுரையாளர் திருமதி.டயானா அவர்களுக்கும்,இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியில் எம்பள்ளி குழந்தைகளுக்கு வாய்ப்பை நல்கிய சூரியன் F.M -நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் துணை தயாரிப்பாளரான அபிராமி,தர்ஷினி,
ஜோதிஷ் மற்றும் Fm ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் எம் பள்ளியின் சார்பில் நன்றி.

"அச்சம் தவிர்" விருதினை எம்பள்ளிக்கு வழங்கிய சூரியன் FM குழுமத்திற்கு நன்றி!நன்றி

No comments:

Post a Comment