ஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை என்ன?... ஆர்பிஐ விளக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 19, 2018

ஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை என்ன?... ஆர்பிஐ விளக்கம்

ஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை என்ன?...
ஆர்பிஐ விளக்கம்

புதிய ரூ. 100 நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இது லாவண்டர் நிறத்தில் காணப்படுகிறது.


கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு விவகாரத்தை தொடர்ந்து புதிய ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்து ரூ. 500, ரூ.50, ரூ. 200 ஆகிய நோட்டுகளையும் ஆர்பிஐ புழக்கத்தில் விட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் புதிய ரூ100 நோட்டுக்கான மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் லாவண்டர் நிறத்தில் காந்தியின் படத்துடன் வெளியாகவுள்ளது.
மேலும் குஜராத்தின் பதானில் உள்ள ராணி கீ வாவ் குளத்தின் புகைப்படம் புதிய நோட்டில் இடம்பெற்றுள்ளது. யுனெஸ்கோ புராதன சின்னத்தின் பட்டியலில் ராணி கி வாவ் குளமும் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்தில் விடப்படும். பழைய ரூ.100 நோட்டுகளும் செல்லும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment