இனி ஆல் பாஸ் கிடையாது..!! மத்திய அரசு திட்டவட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 19, 2018

இனி ஆல் பாஸ் கிடையாது..!! மத்திய அரசு திட்டவட்டம்

இனி ஆல் பாஸ் கிடையாது..!! மத்திய அரசு திட்டவட்டம்
கடந்த 2009-ம் ஆண்டு இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், ஆகியன கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரையிலான மாணவர்கள் மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது அனைவரும் தேர்ச்சி திட்டம் என்று அழைக்கப்படுகிறது.


  இந்நிலையில், இந்த சட்டத்தில் 2-வது முறையாக திருத்தம் செய்வதற்கான மசோதா, நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது

  இந்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதை தாக்கல் செய்தார்.

  அப்போது அவர் தெரிவித்ததாவது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு வழக்கமான தேர்வு நடத்தப்படும். அதில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் 2 மாதங்கள் கழித்து மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
  இதன்மூலம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு 'அனைவரும் தேர்ச்சி' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

  மேலும், அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பின்பற்றுவதா? வேண்டாமா? என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

   அதுபோல், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு எப்படி நடத்துவது என்பதையும் மாநிலங்களே முடிவு செய்யலாம்.

  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும் மத்திய அரசு அளிக்கும் என்றும், தோல்வி அடைந்தாலும், எந்த மாணவரும் பள்ளியை விட்டு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

  இறுதியில், மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

No comments:

Post a Comment