அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நீட் பயிற்சி வகுப்பு தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 18, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நீட் பயிற்சி வகுப்பு தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கடந்த ஆண்டு நீட் பயிற்சி குறுகிய காலத்தில் தொடங்கியதால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. அதனால் இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ெதாடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாஸ்காம் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் பொது நூலக இயக்க மண்டல மாநாடு சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடக்கிறது. அதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விரைவில் ஐஏஎஸ் பயிற்சி அகடமி தொடங்கப்படும். 13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்படும். நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வகுப்புகள் நடத்தப்படும்.
412 மையங்களில் சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். விருப்பம் உள்ள மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் வழியாக சேர்க்கப்படுவார்கள். ஐஏஎஸ் பயிற்சியை பொறுத்தவரையில் மாலை நேரத்தில் 5 மணி முதல் 7 மணி வரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நூலகத்தில் அளிக்கப்படும். பயிற்சியில் சேருவோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் வரவில்லை என்றால் அவர்கள் நீக்கப்படுவார்கள். குரூப் 1 தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டு ரூ.1 கோடி அளவுக்கு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் நூலகத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி பணி முடிந்த பகுதியை பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை சுற்றுலா போல அழைத்து சென்று காட்ட திட்டமிட்டுள்ளோம். தகுதித் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டில் குறுகிய கால இடைவெளியில் அதாவது தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன்பு தான் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கியதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்த 10 வால்யூம்களை தமிழில் மொழி பெயர்த்து அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதமே பயிற்சி தொடங்க உள்ளதால் அதிக அளவில் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அடுத்த ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment