உள்ளாட்சி தேர்தலை, அடுத்தாண்டு பிப்ரவரியில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 4, 2018

உள்ளாட்சி தேர்தலை, அடுத்தாண்டு பிப்ரவரியில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டம்


உள்ளாட்சி தேர்தலை, அடுத்தாண்டு பிப்ரவரியில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்பு களில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளை நிரப்புவதற்கான தேர்தலை, 2016 அக்டோபரில் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. தி.மு.க., தொடர்ந்த இடஒதுக்கீடு வழக்கால், தேர்தலை கடைசி நேரத்தில், உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின், தேர்தல் நடத்தப்படவில்லை.தற்போது, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு, பிப்ரவரியில் தேர்தலை நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: புதிய வார்டுகள் வரையறை பட்டியல், ஆகஸ்டில் அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில், சில மாற்றங்களை செய்ய, அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி, மாற்றங்கள் செய்யும் பணி நடந்து வருகிறது. பட்டியலுக்கு, அரசிடம் ஒப்புதல் கிடைத்ததும், இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்படும். பெண்களுக்கு, 50 சதவீதம், எஸ்.சி., - 18 சதவீதம், எஸ்.டி., - 1 சதவீதம் என, வார்டுகள் ஒதுக்கப்படும். இப்பணிகளை மேற்கொள்ள, ஆறு வாரங்கள் தேவைப்படும். அதன்பின், தேர்தல் முன்னேற்பாடுக்கான ஆய்வு பணிகள், மாவட்ட வாரியாக நடக்கும்; இதற்கு, மூன்று மாதங்கள் தேவை. எனவே, தற்போதைய சூழலில், பிப்ரவரிக்கு பிறகே, உள்ளாட்சி தேர்தல் நடத்தவாய்ப்புள்ளது.இவ்வாறு கூறப்படுகிறது.

No comments:

Post a Comment