இந்த தொகை அவர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. புதிய உத்தரவில், அமைச்சர்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை. எனவே, அவர்கள் இந்த தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. நிர்வாக செயலாளர்கள், வாரியங்கள் மற்றும் கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், துறை தலைவர்கள், முதல்வரின் முதன்மை செயலாளர், முதல்வரின் சிறப்பு அதிகாரி ஆகியோர் இந்த உத்தரவுபடி, மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
ஹரியானா மாநிலத்தில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2015ல் ஒரு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, மாதம் 400 கி.மீ., தூரத்திற்கு அலுவலக கார்கள் பயன்படுத்தும் அதிகாரிகளும், அமைச்சர்களும் மாதம் ரூ.400 செலுத்த வேண்டும். தற்போது இந்த உத்தரவில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், மாதம் 1,000 கி.மீ., தூரத்திற்கு அலுவலக காரை பயன்படுத்தும் அதிகாரிகள் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment