'பான் கார்டு' விண்ணப்பத்தில் புதிய நடைமுறை: வருமான வரித்துறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 22, 2018

'பான் கார்டு' விண்ணப்பத்தில் புதிய நடைமுறை: வருமான வரித்துறை அறிவிப்பு

பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனிமேல்
விண்ணப்பப் படிவங்களில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனிமேல் விண்ணப்பப் படிவங்களில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சிலர் தாயால் வளர்க்கப்படுபவராக இருந்தால், தந்தை பெயர் குறிப்பிடத் தயங்குவார்கள். அவர்களுக்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிசம்பர் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய நேர்முக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நேர்முக வரிகள் வாரியம் வருமானவரி விதிகளைத் திருத்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு விண்ணப்பப் படிவத்தில் புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை விண்ணப்பதாரர் தாயால் வளர்க்கப்படுபவராக இருந்தால், அவர் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது, தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமில்லை.
தற்போதுள்ள நடைமுறையின்படி, பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். இந்தப் புதிய திருத்தம் டிசம்பர் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் மதிப்பை உயர்த்தவும், அவர்களின் உரிமையைக் காக்கவும் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தங்கள் தந்தை பெயரைத் தெரிவிக்க விரும்பாத பலர் இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். தாயால் மட்டுமே வளர்க்கப்படும் தங்களுக்கு, தாயின் பெயரை மட்டும் பதிவு செய்துகொள்ள உரிமை வேண்டும் என்று அவர்கள் கோரி இருந்தனர். இதையடுத்து இந்தப் புதிய திருத்தத்தை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது.

No comments:

Post a Comment