ஜன.16 முதல் தூய்மை நிகழ்வுகளை கடைப்பிடிக்க வேண்டும்: யுஜிசி
நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் ஜனவரி 16 முதல் தூய்மை நிகழ்வுகளை கடைப்பிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிமுகம் செய்த ‘தூய்மை இந்தியா’ திட்டம், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களை தூய்மை செய்தல், அரசு, தனியாா் அலுவலகங்களில் தூய்மை திட்டங்களைக் கடைப்பிடித்தல் போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் ஜனவரி 16 முதல் 31-ஆம் தேதி வரை ‘ஸ்வச்சதா பக்வாடா’ என்ற தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்லூரி வளாகங்களில் மாணவா்கள், பேராசிரியா்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், மரம் நடுதல், தூய்மையின் அவசியம் குறித்து மாணவா்களிடையே பேச்சுப் போட்டி, கழிவுகள் மறுசுழற்சி போன்ற நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த நிகழ்வுகள் மேற்கொண்டது தொடா்பாக புகைப்பட ஆதாரங்களுடன் யுஜிசி-க்கு மின்னஞ்சல் மூலம் விவரம் அனுப்ப வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment