இனி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக்கில் கை வைத்தால்தான் சாப்பாடு - வருகிறது புதிய திட்டம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 12, 2020

இனி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக்கில் கை வைத்தால்தான் சாப்பாடு - வருகிறது புதிய திட்டம்!

இனி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக்கில்
கை வைத்தால்தான் சாப்பாடு - வருகிறது புதிய திட்டம்!


மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணி யில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .
தமிழகம் முழுவதும் உள்ள 49 , 554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ , மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர் . இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண் டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாண வர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது . இருப்பினும் , சத்துணவின் பயன் முழுமையாக மாணவர் களுக்கு சென்று சேருவதை அதி காரிகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை . இதையடுத்து துல்லிய மாகக் கண்டறிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .

இதுதொடர்பாக , சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது :
சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தபின் சத்துணவை பெற்றுச் செல்லலாம் . புதிதாக சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும் . யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது . இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார் .

No comments:

Post a Comment