நாளையும் நாளை மறுநாளும் அரசு விடுமுறையா? பரபரப்பு தகவல்!
ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று தினங்கள் பொங்கல் விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்து ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது.எனவே ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விடுமுறை இல்லை என்றே கருதப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் இதனால் பொங்கல் திருநாளை கொண்டாட வெளியூர் செல்பவர்கள் ஜனவரி 14-ஆம் தேதி மாலை தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையேல் 2 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment