20 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்வு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 30, 2023

20 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்வு!

20 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்வு!தமிழ்நாட்டில் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
             தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக,பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டண உயர்கிறது. 
 
            திண்டுக்கல், திருச்சி, சேலம்,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் தினமும் 30,000 மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் கனரக லாரிகள் மதுரையில் இருந்து தூத்துக்குடி சாலை செல்வதும் தூத்துக்குடியில் இருந்து மதுரை வருவதாக இருந்து வருகிறது. 
 
                இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு விலைப்பட்டியல் குறித்தும் அட்டவணை வெளியிட்டிருந்தது அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்வு. மாதாந்திர கட்டணம் ரூ.2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
        இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290-லிருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
         இதனால் லாரி ஓட்டுனர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கு மேல் சுங்கச்சாவடிக்கு கட்டும் நிலை உருவாகியுள்ளது என்று லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரையில் பண்ணியன் மற்றும் எலியாரப்பத்தி டோல்கேட் மட்டுமே மத்திய அரசின் விலை ஏற்றம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment