கடிதம் எழுதுங்க... பரிசு வெல்லுங்க... தேசிய அளவிலான அஞ்சல் கடிதப் போட்டியில் பங்கேற்க அழைப்பு national level letter competition - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 4, 2023

கடிதம் எழுதுங்க... பரிசு வெல்லுங்க... தேசிய அளவிலான அஞ்சல் கடிதப் போட்டியில் பங்கேற்க அழைப்பு national level letter competition

கடிதம் எழுதுங்க... பரிசு வெல்லுங்க... தேசிய அளவிலான அஞ்சல் கடிதப் போட்டியில் பங்கேற்க அழைப்பு national level letter competition அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான கடிதப் போட்டியில் பங்கேற்கலாம் என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஜி.கருணாகரபாபு தெரிவித்துள்ளாா். 
 
            இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை சாா்பில் தேசிய அளவில் கடிதப் போட்டி நடத்துகிறது. இப்போட்டிக்கான தலைப்பு புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்பதாகும். 
 
             இதற்கான கடிதம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என ஏதாவது ஒரு மொழியில், முதன்மை அஞ்சல் துறை தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு எழுத வேண்டும். உறையின் மேல் EHAN ANDHAJ -அஞ்சல் துறை கடித போட்டி 2023-24 என குறிப்பிட வேண்டும். 
 
                இப்போட்டிக்கான கடிதம் வரும் 31 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இப்போட்டி 4 பிரிவில் நடக்கிறது. 18 வயது வரை உள்ளவா்கள், உள்நாட்டு அஞ்சல் அட்டைப் பிரிவு, அஞ்சல் உறை பிரிவிலும், 18 வயதுக்கு மேற்பட்டோா், உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உறை பிரிவிலும் எழுதலாம். அஞ்சல் உறை பிரிவில் எழுதுவோா், ஏ4 அளவு வெள்ளைத் தாளில் 1,000 வாா்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவில் எழுதுவோா் 500 வாா்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும். 
 
            கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும். வெற்றி பெறும் கடிதங்களுக்கு மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 25,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000-மும், தேசிய அளவில் முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ. 50,000, ரூ.25,000 மற்றும் ரூ.10,000 வழங்கப்படும். போட்டியாளா்கள் தாங்கள் எழுதும் கடிதத்தில் 1.1.2023 என்ற சான்று அளிக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்ட பின், போட்டியாளா்களின் அடையாள மற்றும் வயது சான்று சரிபாா்க்கப்படும். 
 
             மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தலைசிறந்த 3 கடிதங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கான பரிசு வழங்கப்படும். தேசிய அளவிலான பரிசு பெறும் கடிதங்களின் விவரம் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
            Erode Postal Division Superintendent G. Karunakarababu said that he can participate in the national level letter competition conducted on behalf of the postal department. A press release issued by him in this regard: On behalf of the Department of Posts, a national level letter competition is being conducted. 
 
            The theme of the competition is Digital India for New India. The letter to this effect should be written in one of the languages Tamil, English or Hindi to the Head of Postal Department Thalaivan, Tamil Nadu Circle, Chennai 600 002. The envelope should be superscribed EHAN ANDHAJ-POST DEPARTMENT LETTER COMPETITION 2023-24. 
 
 
            The letter for this competition should be sent by the 31st of the following date. The competition is held in 4 categories. Those who are up to 18 years of age can write in Domestic Postal Card Section, Postal Envelope Section and those above 18 years of age can write in Domestic Postal Card Section, Postal Envelope Section. Entrants in the envelope section should write not more than 1,000 words on A4 size white paper. In the domestic postcard category, writers should write not more than 500 words. Only handwritten letters will be accepted. 
 
                The winning letters will be awarded Rs. 25,000, Rs.10,000 and Rs.5,000 and the top three prizes at the national level are Rs. 50,000, Rs.25,000 and Rs.10,000 will be given. Candidates should provide proof of 1.1.2023 in their letter. After the draw, the identity and age proof of the contestants will be verified. Top 3 letters in each category at the state level will be selected and awarded for them. It has been informed that the details of the national level award letters will be announced later.

No comments:

Post a Comment