வடகிழக்கு பருவமழை அக்.16 தொடங்கும்: சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 15, 2025

வடகிழக்கு பருவமழை அக்.16 தொடங்கும்: சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை அக்.16 தொடங்கும்: சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு 

                தமிழகத்தில் நாளை (அக்.16) வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். 

        அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி - காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

        இதன் காரணமாக, வரும் 19-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.கடலோர தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.16) முதல் 18-ம் தேதி வரை, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

             19 முதல் 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

No comments:

Post a Comment